Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 27 நவம்பர், 2019

ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரில் மிதந்தது கனகபுரம் துயிலுமில்லம்!

  admin       புதன், 27 நவம்பர், 2019


ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரை காணிக்கையாக்கி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.2019 ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், உரித்துiடையவர்கள் என ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டு உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில்,தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று 27-11-2019 மாவீரர் நாள் பணிக்குழுவின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது. மணி ஓசை எழுப்பட்டு முதல் மாவீரன் சங்கர் உயிர்நீத்த நேரமன மாலை 6.05 மணிக்கு பொதுச் சுடரேற்றப்பட்டதனை தொடர்ந்து உறவுகள் ஏனைய நினைவுச் சுடர்களை ஏற்றினார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நான்கு மாவீரர்களான சரவணன், தமிழ்ச்சசுடர், சுரேஸ்குமார் விசைவீரன் ஆகியோரின் தந்தையான வைத்திலிங்கம் சண்முகம் அவர்கள் பொதுச் சுடரேற்றினார்.

தொடர்ந்து துயிலுமில்லம் பாடலான தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே எனும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என்ற மிகவும் சோகமான பாடல் வரிகள் ஒலிக்கின்ற போது கலந்துகொண்டவர்களின் கண்ணீரை மாவீரர்களுக்கு காணிக்கையாக்கினர்.









logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரில் மிதந்தது கனகபுரம் துயிலுமில்லம்!

Previous
« Prev Post