Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

இன்று கொழும்பில் நடக்கப் போவது என்ன? பரபரப்பாகும் நிமிடங்கள்..

  admin       திங்கள், 4 நவம்பர், 2019


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொருத்த மட்டில் இன்று முக்கியமான நாளாக அமையப்போகின்றது. இரு பெரும்தலைகளுக்கு இன்று போர் நடக்கப்போகின்றது என்றே கூறலாம்.

அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிக்காவுக்கும் தற்போதைய உறுப்பினர்களுக்கும் இந்த சண்டை நடக்கப் போகின்றது.

அபி ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆனால் இந்த மாநாட்டுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் யாரும் போக கூடாது. மீறி போனால் நடவடிக்கை என கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மற்றும் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால் இன்று நடக்கப்போகும் கூட்டத்திற்கு யார் யார் வரப்போகின்றார்கள்,என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குறித்த கூட்டத்திற்குசெல்வோர்கண்டிப்பாக சஜித்துக்குஆதரவானவர்களாகவே இருக்கவேண்டும். அவ்வாறு சுதந்திரக் கட்சியிலிருந்து சஜித்துக்கு ஆதரவளிக்கப் போகும்அந்த நபர்கள் யார்?

இந்த கூட்டம் வெற்றியை கொடுக்குமா என்ற பல கேள்விகளுடன் பரபரப்பாக நேரம் செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இன்று கொழும்பில் நடக்கப் போவது என்ன? பரபரப்பாகும் நிமிடங்கள்..

Previous
« Prev Post