Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

‘நீதிபதியை மாற்றி தீர்ப்பெழுத வைத்தேன்’: ஹிஸ்புல்லாவின் காணொளிக்கெதிரான வழக்கில் தவராசாவின் சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு!

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


தனக் சாதகமான தீர்ப்பை வழங்கும்விதமாக நீதிபதியை மாற்றியதாக முன்னாள் கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஊ.எம்.ஹிஸ்புல்லாஹ் பேசிய காணொளிக்கு எதிராக, முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா செய்த முறைப்பாடு தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று தவராசாவின் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று அவர் யாழில் செய்தியாளர்களிடம பேசியபோது,

முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா கூறியதாக ஒரு காணொளி வெளியாகியிருந்தது. அதில், தங்களுக்கு சாதகமற்ற ஒரு வழக்கை- ஈச்சமரத்தையும், குரான் வீதிச்சுற்றுவட்டத்தையும் நீக்கும்படி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, நீதிபதியை மாற்றி, தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கக்கூடிய நீதிபதியை மாற்றி, அவர் மூலம், எழுதடா தீர்ப்பை என தமக்கு சாதகமாக தீர்ப்பை எழுதப்பண்ணியதாக கூறியிருந்தார்.

காணொளியின் பிரதியுடன் முறைப்பாடொன்றை பொலிஸ் தலைமையகத்திற்கும், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கும் கடிதம் மூலம் வழங்கியிருந்தேன். நீதிச்சேவை ஆணைக்குழு இந்த விடயத்தை முக்கியத்துவம் கொடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியிருந்தது. இதன்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது. இதில் என்னை சத்தியக்கடதாசி வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது. இதன்படி எனது சத்தியக்கடதாசி வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறையை கேலி செய்யும் விதமாக, நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாக அமைந்ததால் இந்த முயற்சியை செய்தேன். அது வெற்றியளிக்குமென்ற நம்பிக்கையுள்ளது என்றார்
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ‘நீதிபதியை மாற்றி தீர்ப்பெழுத வைத்தேன்’: ஹிஸ்புல்லாவின் காணொளிக்கெதிரான வழக்கில் தவராசாவின் சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு!

Previous
« Prev Post