Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 10 நவம்பர், 2019

கல்முனை தமிழ் பிரதேசசபை விவகாரத்தில் சேதமில்லாத விட்டு கொடுப்பு – ரவூப் ஹக்கீம்

  admin       ஞாயிறு, 10 நவம்பர், 2019


கல்முனை தமிழ் பிரதேசசபை விவகாரத்தில் இரண்டு தரப்புக்கும் விட்டுக்கொடுப்போடு சேதம் இல்லாத முடிவு சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்முனை என்பது தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது எங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதில் முக்கியமானது கல்முனை பிரதேச செயலக விவகாரம். இந்த கோரிக்கையை மிக நியாயமான அடிப்படையில் கல்முனையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அடிப்படை உரிமைகளை இழந்துவிடக் கூடாத நிலையில் கவனமாக இருந்து நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நண்பர்களோடு கதைத்திருக்கிறோம்.

முக்கியமாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனோடும் ஏனைய உறுப்பினர்களோடும் பேசி ஒரு தீர்க்கமான முடிவுகளை கொண்டு வருவதற்கு  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம்  வலியுறுத்தியுள்ளோம்.

எங்கள் ஜனாதிபதியின் ஆட்சி இந்த பிரதேசத்தில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு நிதந்தர தீர்வைத் தருகின்ற ஆட்சியாக இருக்கும். இது தொடர்பாக நான் சஜித் பிரேமதாசவுக்கு நீண்டதொரு விளக்கத்தை கொடுத்துள்ளேன்.

இரண்டு தரப்பும் விட்டுக்கொடுப்போடு சேதம் இல்லாமல் முடிவை எடுக்க தயாராக இருக்கிறார்கள். கௌரவ பிரச்சினையாக பார்க்காமல் வருகின்ற ஆட்சி சஜித் பிரேமதாசவின் ஆட்சியா இருக்கும். அதில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

சாய்ந்தமருது மீனவர்களது பிரச்சினை சாதாரண பிரச்சினை இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடி நாதமாக இருக்கின்ற மக்களின் பிரச்சினை.

கல்முனை பிரதேச நீர் நிலைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் பாரிய நகரமயமாக்கலை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்து காட்டுவோம். அன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுத்த ஆதரவைப் போல் நாம் சஜித் பிரேமதாசவுக்கும் வழங்கி வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கல்முனை தமிழ் பிரதேசசபை விவகாரத்தில் சேதமில்லாத விட்டு கொடுப்பு – ரவூப் ஹக்கீம்

Previous
« Prev Post