Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 6 நவம்பர், 2019

தலைமைக்குழு கூட்டம்: ‘கூவத்தூர் ரிசோட்’ பாணியில் இரகசிய இடத்திற்கு அள்ளிச் சென்றது… ரெலோ அதிரடி!

  admin       புதன், 6 நவம்பர், 2019


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு இன்று இரகசிய இடமொன்றில் கூடியுள்ளது. எங்கே கூடியதென்பது தெரியக்கூடாதென்பதற்காக, மிகமிக இரகசியமான இடமொன்றில் தலைமைக்குழு தற்போது கூடியுள்ளது.

செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்க்கவே இந்த திடீர் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிககளான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஆகியன தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முடிவை தீர்மானிக்க இன்று தலைமைக்குழு 2 மணிக்கு கூடுவதாக இருந்தது.

வவுனியாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் வழக்கமாக கூட்டம் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இம்முறை மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, இரகசியமான இடமொன்றில் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு சென்ற ரெலோ பிரமுகர்களிற்கும் இந்த ஏற்பாடு தெரிந்திருக்கவில்லை. இறுதிநேரத்திலேயே அவர்களிற்கு இடம் சொல்லப்பட்டு, அழைத்து செல்லப்பட்டதாக தெரிகிறது.

ரெலோவின் முடிவை உடனடியாக பத்திரிகையாளர்களிடம் அறிவிக்காமலிருக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில காலத்தின் முன்னர் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் ரிசோட்டில் கூட்டாக தங்க வைக்கப்பட்டிருந்ததை போல, தற்போது ரெலோவும் இரகசியமான இடமொன்றில் சந்திப்பை மேற்கொள்கிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தலைமைக்குழு கூட்டம்: ‘கூவத்தூர் ரிசோட்’ பாணியில் இரகசிய இடத்திற்கு அள்ளிச் சென்றது… ரெலோ அதிரடி!

Previous
« Prev Post