Breaking News

இன்று இந்தியா செல்கிறார் கோட்டா!


ஜனாதிபதியாக பதவியேற்ற பின் கோட்டாபய ராஜபக்ச இன்று முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்கிறார்.

கோட்டாபய பதவியேற்ற கையுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் வந்து பேச்சு நடத்தியதுடன், இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த தடவை ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுடன் சுமுகமான உறவை பேண தவறியதால், ஆட்சியை இழந்ததாக கருதப்படுகிறது. இதனால் இம்முறை இந்தியாவுடனான உறவில் அதீத அக்கறை காண்பிப்பது வெளிப்படுகிறது. அண்மையில் இந்திய ஊடகத்திற்கு செவ்வி வழங்கியதும், அதில் இந்தியா தொடர்பாக முன்னெப்பொழுதும் இல்லாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாவின் இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேசுவார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் பயணமாகிறார்கள். இந்த பயணத்தில் அமைச்சர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.