Breaking News

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல்: தகவல்கள் சீ.ஐ.டீ. யிடம் ஒப்படைப்பு


சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு,  அவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான தகவல்களை இலங்கைக்கான சுவிஸ் துாதரகம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த தகவல்களுக்கு ஏற்ப குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொலிஸ் சீசீடீவீ  பிரிவின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

தூதரக பணியாளரைக் கடத்தியவர்கள், தாங்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என பணியாளரிடம் தெரிவித்துள்ளதாகவும் சுவிஸ் தூதரகம் தகவல் வழங்கியுள்ளது. இருப்பினும், குறித்த சந்தேகநபர்கள் தாம் தப்பித்துக் கொள்வதற்காக பயன்படுத்திய உபாயமாக இது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்யவதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக அறிவிக்கையில் மேலும் கூறியுள்ளதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்தள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.