Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 25 நவம்பர், 2019

மனோ ஊற்றிய ஒரு குவளையல்ல… பெருமழை பொழிந்தாலும் அடங்காது’: மீண்டும் அடம்பிடிக்கும் அதாவுல்லாஹ்!

  admin       திங்கள், 25 நவம்பர், 2019


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மலையக மக்களை இழிவுபடுத்தும் பேசும் விதமாக பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.அதாவுல்லாஹ் தன்னிலை விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது மோசமான வார்த்தைக்காக அவர் வருந்தாமல், வழக்கம் போல எதிர்த்தரப்பில் குற்றம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார்.

அந்த வீடியோவில்-

கடந்த நான்கரை வருடத்தல் சமூகங்களை கூட்டிவிட்டு கூதல் காய்ந்து அதில் அரசியல் லாபம் தேடிய கூட்டம் தோல்வியடைந்துள்ளார்கள். இன்னும் மீதமிருக்கும் சமூகங்களை கூட்டிவிட, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை பாவிக்க திட்டமிட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களின் நிலங்கள் பற்றி நீண்டகாலமாக நான் பேசி வருகிறேன். சிறுபான்மையினங்களின் மற்ற இனங்களுடன் மலையக தமிழர்களை கூட்டிவிடும் செயற்பாட்டை நான் நீண்டகாலமாக கண்டித்து வந்திருக்கிறென்.

அன்றைய நிகழ்ச்சியில், தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனையை நான் பேசிக் கொண்டிருந்தபோது, அதை தாங்க முடியாதவர்கள், என்னுடைய பேச்சை இடைநிறுத்தி, அதை முடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு மொழியோட்டத்தை பிடித்துக் கொண்டு அதில் அரசியல் லாபம் தேட முயன்றுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களை நான் நேசமுடன் பார்ப்பவன். தொண்டமானால் வழிநடத்தப்பட்டவர்கள். அந்த மக்களின் வாழ்வு சிறக்க வேண்டுமென நாங்கள் நினைப்பதால்தான், எங்களை முடிந்து விட்டுள்ளனர். வீடியோவை பார்த்தாலே இது வேண்டுமென்றே முடிந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.

மனோ கணேசன் போன்றவர்கள் கடந்த நான்கரை வருடத்தில்ஏற்படுத்திய இனவாத சூட்டை தணிக்க, எஞ்சிய குவளையில் இருக்கும் தண்ணீர் போதுமென நினைக்கிறார்கள். பெரும் மழை பொழிய வேண்டும் இந்த இனவாத தீயை அணைக்க என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மனோ ஊற்றிய ஒரு குவளையல்ல… பெருமழை பொழிந்தாலும் அடங்காது’: மீண்டும் அடம்பிடிக்கும் அதாவுல்லாஹ்!

Previous
« Prev Post