Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

கோட்டாபயவின் மேடையில் ஸ்ரீ ல.சு.க. எம்.பி.யை பேச விடாது கூச்சல்!

  admin       சனி, 2 நவம்பர், 2019


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து அலவ்வை நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார உரையாற்றும் போது சபையிலிருந்து பாரிய கூச்சல் சப்தம் எழுப்பி இடைஞ்சல் செய்யப்பட்டது.

நேற்று மாலை அலவ்வையில் அவர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து பேச ஆரம்பித்தவுடனேயே அவரைப் பேசவிடாமல் கூச்சல் சப்தம் எழுப்பியவாறே பொதுஜன பெரமுன முன்னணி ஆதரவாளர்கள் அவருக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுன மேடையில் பேசுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு எதிராக பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேல் மட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தாலும் கூட, கீழ் மட்ட ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களை புறக்கணித்தே வருகின்றமைக்கு இது சிறந்த உதாரணம் என சுதந்திரக் கட்சியின் மாற்றுக் குழு கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோட்டாபயவின் மேடையில் ஸ்ரீ ல.சு.க. எம்.பி.யை பேச விடாது கூச்சல்!

Previous
« Prev Post