Breaking News

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி பயங்கர விபத்து : பலர் காயம்



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி விபத்து

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்ஸை வரை பயணத்தை மேற்க்கொண்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 3.45 மணியளவில் இந்த வி பத்து குருநாகல் கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றதாக கல்கமுவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

4 புகையிரத பெட்டிகள் சேதமடைந்திருப்பதுடன் காயமடைந்தவர்கள் தொடர்பிலான விபரம் உடனடியாக அறியமுடியவில்லை என கல்கமுவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதுவரை காயங்களுக்குள்ளான 5 பேர் கல்கமுவ ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தின் காரணமாக வடக்கு புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








No comments

Note: Only a member of this blog may post a comment.