Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 26 நவம்பர், 2019

அரச அதிகாரிகளென கூறி பெருந்தொகையை சுருட்டிய பலே ஆசாமிகள்: யாழில் சம்பவம்!

  admin       செவ்வாய், 26 நவம்பர், 2019


யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் தங்களை அரச திணைக்கள அதிகாரிகள் என குறிப்பிடப்பட்ட குழுவினரிடம் பெருமளவு பணத்தை விவசாயிகள் இழந்துள்ளனர்.

ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியிலுள்ள விவசாயிகளின் தகவல்களை பெற்றுக்கொண்ட திருட்டுக்கும்பல் ஒன்று, விவசாயிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினர். தங்களை விவசாய திணைக்கள அதிகாரிகள் என குறிப்பிட்டே கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

விவசாயிகளிற்கு பயிர்களை வழங்கவுள்ளதாகவும், தம்மிடம் தொடர்ந்து பயிர்களை பெற்றுக்கொள்ள 53 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டுமென்றும் நம்ப வைத்துள்ளனர். முதற்கட்டமாக 36 ஆயிரம் ரூபாவை செலுத்தும்படி கூறியுள்ளனர்.

அவர்களின் பேச்சில் மயங்கிய பல விவசாயிகள் 36 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளனர். அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

முதற்தவ பணம் செலுத்திய ஒரு வாரத்தில் பயிர்களை பெற்றுக்கொள்ளலாமென குறிப்பிட்டிருந்தனர். அதன்படி, பயிர்களை பெற, அவர்களின் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டபோதும் அது முடியவில்லை. பயிர்களும் வரவில்லை.

இதையடுத்து, பற்றுச்சீட்டில் உள்ள முகவரிக்கு விவசாயிகள் சென்றுள்ளனர். அது யாழ்ப்பாணம் நல்லூரடியிலுள்ள பூங்கா ஒன்றின் முகவரி.

இதையடுத்தே தமது தலையில் திருடர்கள் மிளகாய் அரைத்தது விவசாயிகளிற்கு தெரிய வந்தது. அப்படியொரு குழுவினர் தம்மிடமில்லையென விவசாய திணைக்களமும் தெரிவித்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரச அதிகாரிகளென கூறி பெருந்தொகையை சுருட்டிய பலே ஆசாமிகள்: யாழில் சம்பவம்!

Previous
« Prev Post