Breaking News

விடுமுறையில் இலங்கை வந்த கனடிய தமிழர் புகையிரதத்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழப்பு!


புகையிரதத்தில் இருந்து விழுந்து காயமடைந்த கனடா வாழ் தமிழர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (28) இந்த விபத்தில், சந்திரராஜா (82 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கனடா நாட்டவர் சிலாபம் பிரதேசத்தில் வசித்து வரும் தனது உறவினர்களை சந்தித்த பின்னர் மீண்டும் கொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்த போது வென்னப்புவ – மிரிஸ்ஸன்கொடுவ பிரதேசத்தில் புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Note: Only a member of this blog may post a comment.