தனது இறால் பண்ணையை பாதுகாக்கவே மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டதாக வெளியானதாக செய்திகள் போலியானவை என மறுத்துள்ளார் மட்டக்களப்பு எம்.பி சிறிநேசன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
இணையத்தளமொன்றில் ஸ்ரீநேசனின் இறால் பண்ணையைப் பாதுகாப்பதற்காக முகத்துவாரம் வெட்டப்பட்டதா? என்ற தலைப்பில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட விசமிகள் போலிச் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.
என்னிடம் எந்த ஒரு இடத்திலும் இறால் பண்ணை கிடையாது. மேலும் முகத்துவாரம் வெட்டிய விடயத்துடன் நான் தொடர்புபடவில்லை. ஆகவே, முற்றிலும் அபாண்டமான பொய்களை வெளியிட்ட இணையத்தளம், நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டுளேன். அரசியலிலும், சமூகத்திலும் மிகவும் கேவலமான, மக்கள் செல்வாக்கிழந்த நயவஞ்சர்கள் உள்ளார்கள். அவர்களின் கேவலமான வெளிப்படுத்தலே இதுவாகும்.
இதை விடவும் இன்னும் சில காழ்ப்புணர்வாளர்கள் என்னிடம் கோடிக்கணக்கான சட்ட விரோத சொத்துக்கள் இருப்பதாகவும் முகநூலில் பதிவேற்றியுள்ளார். இந்தச் சொத்து விபரம் முன்னாள் முதலமைச்சர் ஒருவரில் பெயரில் இருப்பதாக இன்னொரு இணையம் செய்தியாக வெளியிடப்பட்டிருந்ததை முன்பு காணக்கூடியதாக இருந்தது.
தற்போது அப்பெயர் மாத்திரம் மாற்றப்பட்டுச் சொத்துப்பட்டியல் எனது பெயரில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொய்யர்களே! பொறாமைக்காரர்களே! நீங்கள் மிகவும் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஏன் உங்கள் முகத்தைக் காட்ட மறுக்கிறீர்கள், மறைக்கிறீர்கள்.
உங்கள் எழுத்துகள் , பேச்சுக்கள், நடத்தைகள் மூலமாக நீங்கள் யார்? என்பதை மக்கள் அறிவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.