Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 27 நவம்பர், 2019

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் வெள்ளை வாகனத்தில் கடத்தல்: தெரியாதென்கிறது அரசு!

  admin       புதன், 27 நவம்பர், 2019


கொழும்பிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பெண், வாகனத்திற்குள்ளேயே பல மணிநேரமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு, அவரது கைத்தொலைபேசியின் தரவுகளை பெற்றுவிட்டு, அவரை வாகனத்தில் இருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளதாக சுவிற்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறையும் இந்த சம்பவத்தை உறுதிசெய்துள்ளது.

கடத்தப்பட்ட பெண்ணிடம், தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு வெள்ளை வாகன குழு கட்டாயப்படுத்தியதாக சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை தெரிவித்ததாக சுவிஸ்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.

“சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த சம்பவத்தை இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணையை கோருகிறது” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பியர்-அலைன் எல்ட்சிங்கர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, சுவிட்சர்லாந்திற்கான இலங்கை தூதரும் பெர்னில் உள்ள அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைவாகன குழு எதை தேடியது என்பதை வெளியுறவுத்துறை வெளியிடவில்லை. எனினும், அண்மையில் இலங்கையிலிருந்து வெளியேறிய குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் நிஷாந்த டி சில்வா தொடர்பான தகவல்களையே கடத்தப்பட்டவரிடம் விசாரிக்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், சுவிற்சர்லாந்து விசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பான தகவல்களையும் அவர்கள் விசாரணை நடத்தி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியாது என அவர் பதிலளித்தார். பதில் பொலிஸ்மா அதிபர் அறிக்கை மூலம் இந்த விடயத்தை தெளிவுபடுத்துவார் என்றும் குறிப்பிட்டார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சுவிஸ் தூதரக பெண் பணியாளர் வெள்ளை வாகனத்தில் கடத்தல்: தெரியாதென்கிறது அரசு!

Previous
« Prev Post