வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த மாநாடு இன்று (03.11.2019) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் தடுப்பு வேலி அமைந்து சோதனைகளை மேற்கொள்வதுடன் மைதானத்தினுள் கூடாரம் அமைத்து மாநாட்டுக்கு செல்பவர்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சார மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாத்திரமே பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாநாட்டில் அதிக ஒலி காரணமாக பிரச்சார மாநாடு இடம்பெறும் மைதானத்திற்கு அருகே தனியார் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளமையினால் அவற்றின் கல்வி நடவடிக்கையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.