Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 28 நவம்பர், 2019

ஷாபி, ஹிஸ்புல்லா விவகாரத்தில் மீள் விசாரணைக்கு உண்ணாவிரதம் இருக்க தேவையில்லையென நம்புகிறேன்: மீண்டும் மிரட்டும் ரத்ன தேரர்!

  admin       வியாழன், 28 நவம்பர், 2019


வைத்தியர் ஷாபி விவகாரம், ஹிஸ்புல்லாஹின் மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பாக அரசியல் கலப்பற்ற விசாரணைகளை இந்த அரசாங்கம் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

இந்த பிரச்சினைகளை கையாள்வதில் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வைத்தியர் சிஹாப்தீன் ஷாபி அஹமட் விவகாரத்தில் கடந்த அரசாங்கமும் சிஐடியும் நடந்துகொண்டது வருந்தத்தக்கது. இந்த விஷயத்தில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும்.

ஹிஸ்புல்லாவின் ஷரியா பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் குறித்து ஆராய சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் இந்த விசயங்களை நீதித்துறை அணுக அனுமதிக்க வேண்டும்.

இந்த விசயங்களை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதற்காக போராட்டங்களை நடத்தவோ அல்லது ஊடக மாநாடுகளை கூட்டவோ வேண்டுமென நாங்கள் நம்பவில்லை. அது அதன் பொறுப்பை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று எச்சரிக்கை தொனியில் கூறினார்.

நாட்டில் ஒரே கல்விக்கொள்கை, திருமணச்சட்டம் அவசியமென்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், முந்தைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட எம்.சி.சி, சோஃபா மற்றும் ஏ.சி.எஸ்.ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களை அரசாங்கம் செயல்படுத்தாது என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

“யு.என்.பி மேற்கண்ட ஒப்பந்தங்கள் குறித்து சுயவிமர்சனம் செய்ய வேண்டும். எந்தவொரு அரசியல் வேறுபாடும் இல்லாமல் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் எதிராக அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

சிறுபான்மை சமூகங்களின் ஆதரவு இல்லாமல் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நிறுவ முடியும் என்பதை சிங்கள மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களிடமிருந்து அரசாங்கம் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது. பௌத்த பிக்குகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் ஆதரித்தனர்” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தீவிரவாதிகள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தான் நடத்தி உண்ணாவிரதம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தீர்க்கமான காரணியாக மாறியது என்றும் ரத்ன தேரர் கூறினார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஷாபி, ஹிஸ்புல்லா விவகாரத்தில் மீள் விசாரணைக்கு உண்ணாவிரதம் இருக்க தேவையில்லையென நம்புகிறேன்: மீண்டும் மிரட்டும் ரத்ன தேரர்!

Previous
« Prev Post