Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு… நாம் துரோகியென்றால் மஹிந்தவும் துரோகிதான்: யாழில் ரணில்!

  admin       ஞாயிறு, 3 நவம்பர், 2019


பிரேமதாசா, சந்திரிகா, மஹிந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையிலேயே நாம் அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ளவுள்ளோம். தமிழர்களின் பிரச்சனையை தீர்க்கவுள்ள சஜித் துரோகியென்றால், மஹிந்த ராஜபக்சவும் துரோகிதான். அவரது கால யோசனைகளின் அடிப்படையிலேயே இதனை செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று (3) யாழ்ப்பாணம் வேலணையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

இனப்பிரச்சனையை காயத்தை போல தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அதை தீர்த்து விட்டு முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளது. எமது திட்டத்தை பகிரங்கமாக முன்வைத்துள்ளோம். யாருடனும் இரகசிய ஒப்பந்தங்கள் கிடையாது. எமது யோசனையை ஏற்று வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் எமமுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இங்கு வந்தபோது கோட்டையையும் அதன் முன்னாலுள்ள பூங்காவையும் கடந்துதான் வந்தேன். சில இளைஞர்கள் கையில் ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் கரங்களை பிடித்துக் கொண்டு நடைபயின்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உட்கார்ந்து கதைபேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது சுதந்திர யாழ்ப்பாணம்.

கொழும்ப விகாரமாதேவி பூங்காவைப் போலிருக்கிறது. இந்த சுதந்திரம் அண்மையில்தான் வந்தது. இதற்கு முன்னர் அப்படியான நிலைமையிருக்கவில்லை. பயம்தான் இருந்தது. அந்தப்பக்கம் போனால் யாராவது விரட்டியடித்து விடுவார்கள். இன்று யாழுக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திரம் இருக்கிறது. 2015 ஜனவரி 8இல் அன்னப்பட்சிக்கு நீங்கள் புள்ளடியிட்டதால் இது ஏற்பட்டது.

இன்று யாரும் காணாமல் போவதில்லை. காரணமில்லாமல் கைது செய்யப்படுவதில்லை துப்பாக்கியால் சுடுவதில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, ரத்துபஸ்வெவவில் தண்ணீர் கேட்டவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பயமின்றி வாழ முடிகின்றது.

இன்று அரசியல் தீர்வை தேடிக்கொண்டு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எராளமான காணிகளை விடுவித்துள்ளோம். காணாமல் போனவர்கள் பற்றி தேடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவம், காணமடைந்தவர்கள் மீது இப்பொழுது அதிக கவனம செலுத்தப்படுகிறது.

மொட்டுக்கு நீங்கள் வாக்களித்தால் இருண்ட காலம் வரும். வெள்ளை வான் வரும். நீங்கள் அன்னத்திற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கினால் கோட்டாவும் கிடையாது. வெள்ளை வானும் கிடையாது.

அரசியல் பிரச்சனைகளை தீர்க்க நாம் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறோம். புதிய அரசியலமைப்பை முன்வைக்க எமக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. மொட்டு அதை தடுத்து விட்டது. முதலாவதாக எமக்கு வரமொன்றை தாருங்கள், நாட்டில் பதிய அரசியலமைப்பை உருவாக்க, நாடாளுமன்றதை பலப்படுத்த. அதற்காக புதிய தேர்தல் முறையொன்றை கொண்டு வர வேண்டியுள்ளது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு பிரதமரின் ஒப்புதலுடன் காரியமற்ற அந்த அரசியலமைப்பு தேவையாக உள்ளது.

ஒற்றையாட்சிக்குள் (ஏக்கிய ராஜ்ஜிய) நாட்டுக்குள் அதிகாரத்தை பலப்படுத்த நாம் நடவடிக்கையெடுக்க வேண்டியுள்ளது. எங்களது திட்டத்தின்படி அதிகாரப்பரவலாக்கலிற்கு அல்லது புதிய அரசியலமைப்பிற்கு இரண்டு விடயங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது. சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வது.

நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத விதத்தில் அதிகாரத்தை பகிர்வோம். பிரேமதாச, சந்திரிகா, மஹிந்த காலத்திலும் கொண்டு வரப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தீர்வு திட்டத்தை உருவாக்குவோம். வடக்கிலும் தெற்கிலுமுள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாக அதை செய்வோம்.

நாட்டை காட்டிக் கொடுத்ததாக யாரும் சொல்ல முடியாது. நாம் முன்வைக்கவுள்ள யோசனையில் பிரேமதாச காலத்தில் முன்வைத்த அறிக்கையிலிருந்தவை இருக்கிறது, சந்திரிகா காலத்தில் முன்வைத்த அறிக்கையிலிருந்தவை இருக்கிறது, மஹிந்த காலத்தில் முன்வைத்த அறிக்கையிலிருந்தவை இருக்கிறது. இந்த அனைத்தும் அந்த இடத்திற்கு பொருத்தானவை.

இதை செயற்படுத்துபவர் துரோகியென்றால், மஹிந்த ராஜபக்சவும் துரோகிதான். இதற்கு வெளியில் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆகவே மஹிந்த ராஜபக்சவின் யோசனைகள் தொடர்பாக கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லா விட்டாலும், நாங்கள் சொல்கிறோம், அதை நிறைவேற்றுவோம் என.

அதிலிருந்துதான் எமது அரசியல் தீர்வை தேடப் போகிறொம். அதேபோல செனட் சபையை உருவாக்கப் போகிறோம். ஒவ்வொரு மாகாணசபையிலிருந்தும்தான் செனட்சபை உறுப்பினர்கள் இருப்பார்கள். இராஜ்ஜசபா போன்று.

அதிகார பகிர்வை நாம் சரியான முறையில் செய்யவுள்ளோம். இவற்றை நாம் மேற்கொள்ளும்போது ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். தீர்துள்ளோம். இன்னும் சிலவற்றை தீர்க்க வேண்டியுள்ளது.

காணிகளை கையளித்தல், காணாமல் போன நபர்கள், நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இவற்றிற்கு தீர்வு கண்டுகொடுக்க தயாராக உள்ளோம்.

நாம் வடக்கிலும், தெற்கிலுமுள்ள எல்லோர் சம்பந்தமாகவும் பேசித்தான் இவற்றை முன்வைத்துள்ளோம். நான் வடக்கிலுள்ள அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கிறேன், இந்த விடயங்களை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து பயணிப்பதற்கு. பகிரங்கமாக இவற்றை முன்வைத்துள்ளோம். ஒளித்து மறைப்பதற்கு எதுவுமில்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். ஒரு காயத்தைபோல இதை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. நாங்கள் இவற்றை தீர்த்து விட்டு முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

எங்களது ஜனாதிபதியை தெரிவுசெய்ததன் பின்னர் நாங்கள் மீண்டும் உங்களிடம் வந்து கோரிக்கை விடுக்கவுள்ளோம், புதிய அரசியலமைப்பிற்கு சார்பான கட்சிகளிற்கு வாக்களித்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுத்தருமாறு. அதற்காக எமக்கு 125 பாராளுமன்றஉறுப்பினர்களை பெற்றுத்தாருங்கள். அவ்வளவுதான் சொல்ல வேண்டியுள்ளது.

நாங்கள் யாருடனும் இரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவில்லை. நாங்கள் யாருடனும் பகிரங்க ஒப்பந்தங்களும் செய்து கொள்ளவில்லை. நாங்கள் யாருடனும் பகிரங்க ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. எல்லோருடைய யோசனைகளையும் பெற்று அவற்றை முன்வைத்துள்ளோம். இவற்றை ஏற்றுக்கொண்டு சஜித்தை ஜனாதிபதியாக்க அன்னப்பறவைக்கு முன்னால் வாக்களிக்க கோருகிறேன்.

நாங்கள் பெண்களின் அரசியல் பிரச்சனையையும் தீர்க்கவுள்ளொம். இங்குள்ள பெண்களிற்கு நாடாளுமன்றத்திலோ வேறு எங்குமோ சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இப்பொழுது பிரதேசசபைகளில் 25 வீதமானவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மாகாணசபைகளிலும் 25 வீதமான இடஒதுக்கீடு வழங்குகிறோம். விருப்பமா இல்லையா? (அரங்கில் கைதட்டல்)

நாடாளுமன்றத்தில் தேசியப்பட்டியலில் 25 வீதமான பெண்களிற்கு வழங்கவுள்ளோம். செனட்சபையிலும் 25 வீதமான பெண்களிற்கு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளோம். ஆகவே அவரகளால் தமக்காக போராட முடியும். வடக்கிலிருந்து செல்பவர்களால் காணாமல் போனவர்கள் பற்றி கேள்வியெழுப்ப முடியும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மொனராகலை ஆகிய பகுதிகளை இன்னும் அபிவிருத்தியடையாத பிரதேசங்களாக கருதி நிதியுதவியளிக்கும்படி நாம் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் விவசாயத்தை நவீனப்படுத்தவுள்ளோம். வறண்ட வலயத்திலும் நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். புதிய பயிர்களை பயிரிட வேண்டும். எற்றுமதி விவசாயத்திற்கு செல்ல வேண்டும். மீன்பிடியையும் நவீனப்படுத்த வேண்டும். நீண்டதூரம் செல்லும் படகுகளை வழங்கவுள்ளோம். விவசாயம், மீன்பிடிக்காக குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறைகளை தனியாரின் துணையுடன் அமைக்கவுள்ளொம்.

மிகப்பெரிய பிரச்சனை இந்தியாவிலிருந்து வரும் மீனவர்கள். அவர்களை பிடித்து திருப்பியனுப்ப நடவடிக்கையெடுத்துள்ளோம். இந்திய அரசுடன் எப்போதும் இதுபற்றி பேசி வந்துள்ளோம். அவர்களிற்கு சொல்லியிருக்கிறோம் இதை தடுத்து நிறுத்துமாறு. இப்போது இந்திய அரசாங்கம், தமிழக மீனவர்களை நடுக்கடலிற்கு வருவதை தடுக்க நடவடிக்கையெடுத்துள்ளது. இப்படி ஏராளமான வேலைகளை செய்துள்ளோம்.

நாம் யாழ்ப்பாணத்திற்கு புதிய பொருளாதாரத்தை வழங்குவோம். அதுதான் சுற்றுலா பொருளாதாரம். அதற்காக இங்கு விமான நிலையமொன்று அமைத்துள்ளோம். ஹொட்டல்கள் நிர்மாணிக்கப்படும். இந்த தீவுகளிற்கு பயணிப்பதற்கு தனியாக படகுசேவைகள் ஆரம்பிக்க முடியும். அது யாழ்ப்பாண மக்கள் செய்ய வேண்டியது. அதன்மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். அந்த பகுதிகளிற்கு அழைத்து சென்று காண்பித்து மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வாருங்கள். இல்லாவிட்டால் மன்னாரிற்கு அழைத்து செல்லுங்கள்.

தலைமன்னார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம். காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்போது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் காணி ஒதுக்கப்பட்டு தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது. பூநகரியில் புதிய நகரம் அமைககப்பட்டு அங்கு பல்கலைகழகம், உயர்கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

இப்பொழுது வடக்கிற்கு இரண்டு பல்கலைகழகங்கள் உள்ளன. யாழ், வவுனியா பல்கலைகழகங்களுடன் மேலும் பல்கலைகழகங்கள் அமைக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுடன் வடக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதனை தீர்த்தவுடன் யாழ்ப்பாணமும், வடக்கும் ஏனைய பகுதிகளை போல விரைவில் முன்னோக்கி செல்ல வேண்டும். அவற்றை மேற்கொள்ள அன்னப்பறவையின் முன்னால் புள்ளடியிட கேட்டுக்கொள்கிறேன்.

முழுநாடும் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். செல்வற்தர்களாக மாற வேண்டும்.

நான் கோட்டா பற்றியும், மொட்டு பற்றியும் ஒன்றும் பேசப்போவதில்லை. பேசிப்பலனுமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் என்பது உங்களிற்கு தெரியும்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு… நாம் துரோகியென்றால் மஹிந்தவும் துரோகிதான்: யாழில் ரணில்!

Previous
« Prev Post