Breaking News

யூரியூப் அலைவரிசை பெண் ஊடகவியலாளர் சிஐடியில் பல மணிநேரம் விசாரணை!


வொய்ஸ் ரியூப் எனப்படும் யூரியூப் அலைவரிசையை நடத்தி வரும் ஊடகவியலாளர் துஷாரா விதானகே நேற்று சிஐடியினரால் பல மணித்தியாலம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சிஐடி தலைமையகத்திற்கு காலை 8.30 மணிக்கு அழைக்கப்பட்ட அவர், பல மணி நேர விசாரணையின் பின், வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

சிஐடியின் கணினி குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப்பிரிவினர் அவரை விசாரணைக்குட்படுத்தினர்.

துஷாரா விதானகேக்கு எதிராக கடும்போக்கு சிங்கள அமைப்பொன்று முறைப்பாடு செய்திருந்தது. த லீடர் வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட விடயமொன்று தொடர்பாக செய்யப்பட்ட அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணை நடந்துள்ளது.

எவ்வாறாயினும், தனது ஊடகப்பிரிவில் பணியாற்றிய துஷாரா சிஐடியினரால் இலக்கு வைக்கப்படுவார் என அமைச்சர் மங்கள ஏற்கனவே ருவிற்றரில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கம்பெரலிய, என்டபிரைஸ் சிறிலங்கா திட்டங்களின் பிரச்சாரங்களிற்கு துஷாராவே பொறுப்பாக செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.