Breaking News

லண்டனைத் தொடர்ந்து நெதர்லாந்திலும் கத்திக்குத்து! மூன்று பேர் காயம்! தாக்குதல்தாரி தப்பி ஓட்டம்!!

நெதர்லாந்தின் Hague என்ற நகரத்தில் பரபரப்பான ஷாப்பிங் தெருவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 19:45 மணிக்கு இந்த தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குப் பின்னர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நகரின் Grote Marktstraatஅல்லது பிரதான சந்தை பகுதியில் உள்ள Hudson's Bay கடையில் நடந்தது.
இந்த தாக்குதலுக்கு சாட்சியம் அளித்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதலின் படங்கள் அல்லது காட்சிகளை தன்வசம் வைத்திருப்போர்கள் அவற்றை போலீசாருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
தாக்குதல்ல ஈடுபட்ட சந்தேக நபர் 45 முதல் 50 வயதுக்குட்பட்ட வராகவும், சாம்பல் நிற ட்ராக் சூட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது

The Hague stabbing: Three injured in attack on shopping street