Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 30 நவம்பர், 2019

யாழில் நண்பருடன் கதைத்துக் கொண்டிருந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு சீரழிப்பு: ரௌடிகள் இருவர் சிக்கினர்!

  admin       சனி, 30 நவம்பர், 2019


யாழ்ப்பாணத்தில் நண்பரொருவருடன் கதைத்துக் கொண்டிருந்த சிறுமி ரௌடிகளால் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட ரௌடிகள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்று பொலிசார் தெரிவித்ததையடுத்து, அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தி அதனை தமது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட மேலும் மூன்று வழக்குகளில் பொலிஸாரால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த சம்பவம் கோப்பாய், இருபாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் இருபாலையில் ஒழுங்கை ஒன்றில் நின்று 14 வயதுச் சிறுமியும் அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கி அவரை அங்கிருந்து துரத்திவிட்டு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியை ஒதுக்குப் புறம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர். அதனை ஒளிப்படம் பிடித்துள்ளனர்.

வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் ஒரு வாரத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்தனர்.

உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் விஜிதரன் அல்லது குட்டி (இவரது மற்றொரு முகவரி கிளாலி வீதி எழுதுமட்டுவாழ்) இருபாலையைச் சேர்ந்த சற்குணம் ஜெம்சன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தவேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்பு உள்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அன்றுவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் மூன்று வெவ்வேறு வழக்குகளில் பொலிஸார் முற்படுத்தினர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளர் கொலை, கொள்ளைச் சம்பவம் மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள வழக்குகளிலேயே சந்தேகநபர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கும் கொலைக்கு தொடர்பு இருபதாக சான்று ஆதாரங்கள் உள்ளனவா? என்று பொலிஸாரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகநபர்கள் இருவரும் அங்கு நின்றனர் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

அத்துடன், கொலைச் சம்பவ இடத்தில் பெறப்பட்ட குருதி மாதிரிகளுடன் சந்தேநபர்களின் குருதி மாதிரிகள் ஒத்துச் செல்கின்றவா என்று விசாரணைகளை முன்னெடுக்க அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதற்கு அனுமதியளித்த மேலதிக நீதிவான், கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழில் நண்பருடன் கதைத்துக் கொண்டிருந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு சீரழிப்பு: ரௌடிகள் இருவர் சிக்கினர்!

Previous
« Prev Post