Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 26 நவம்பர், 2019

புலிகள் மஹிந்தவை விரும்பினார்கள்… டக்ளஸ் கோட்டாவை விரும்பினார்; புலிகளிற்கும் எமக்கும் நோக்கம் ஒன்று: ஈ.பி.டி.பி!

  admin       செவ்வாய், 26 நவம்பர், 2019


புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனது நோக்கத்திற்கும் எண்ணத்திற்கும் செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, வடக்கு கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் ஈ.பி.டி.பியினர் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (25) பருத்தித்துறை சக்கோட்டை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற கடற்தொழிலாளர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு 1958ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறியக் கோரி ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே.ஆர் ஜெயவர்த்தன கண்டிக்கு பாதையாத்திரை மேற்கொண்டார். அதனால் அவ்வொப்பந்தமும் செயலிழந்து போனது.

தமிழர்கள் வந்தேறு குடிகள், அவர்களுக்கு ஒரு அங்குல நிலமும் உரிமையில்லை, அரசியல் உரிமையும் இல்லை என்பதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க ஐக்கிய தேசிக் கட்சி மறுத்தும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.

1983 களில் திட்டமிட்டு இனக்கலவரத்தை உருவாக்கியது. அதனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு புகலிடம் தேடி ஓடினர். அவ்வாறாக இனவாத தீயை மூட்டினார் ஜே.ஆர்.

இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பிரேமதாசா ஆட்சிக்கு வந்தார். அவரும் மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுத்து தமிழர்களுக்கான மாகாண ஆட்சி முறையையையும் முடக்கினார். இதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார். இனி எச்சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிபீடம் ஏறவிடக்கூடாது, அதனை தான் அனுமதிக்கப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

அதனால்தான் ஐக்கிய தேசியக்கட்சியின் தந்திரங்களை நன்கு அறிந்து கொண்டு ஜனாதிபத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அமரக்கூடாது என்பதில் கவனமாக இருந்த பிரபாகரன் அவர்கள் 2005 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ ஒரு யதார்த்தவாதி என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

அத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. அவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அமர்வதை எதிர்த்து வருகிறது. புலிகள் இயக்கத்துடன் அரசியல் ரீதியாக கருத்து வேற்றுமையிருந்த சமயமும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அமரக் கூடாது என்ற புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனது நோக்கத்திற்கும் எண்ணத்திற்கும் செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. ஆனால் புலிகளின் தியாகங்களுக்கு உரிமை கொண்டாட முனையும் கூட்டமைப்பினர் புலிகளின் நோக்கத்திற்கும் எண்ணத்திற்கும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே உறவை கொண்டாடி வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! புலிகள் மஹிந்தவை விரும்பினார்கள்… டக்ளஸ் கோட்டாவை விரும்பினார்; புலிகளிற்கும் எமக்கும் நோக்கம் ஒன்று: ஈ.பி.டி.பி!

Previous
« Prev Post