Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 30 நவம்பர், 2019

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல்: குற்றச்சாட்டை மறுக்கிறது பொலிஸ்!

  admin       சனி, 30 நவம்பர், 2019


சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளரை வெள்ளை வாகனத்தில் கடத்தி, விசாரணை மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக சிஐடியினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விவகாரத்தில் பொலிசாருக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவின் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர வெளியிட்ட அறிக்கையில், சுவிஸ் தூதரகத்திடம் மேலதிக தகவல்களை பொலிசார் கோரியுள்ளதாகவும்,  அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக தூதரகம் நேற்று சில தகவல்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஐடி விசாரணைக்கு மேலதிகமாக, கொழும்பு குற்றப்பிரிவு (சிசிடி) மற்றும் சிசிடிவி பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தூதரகத்தின் பெண் பணியாளரை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத குழுவினர் தம்மை சிஐடியைச் சேர்ந்தவர்கள் என்று அவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. எனினும், இதை பொலிசார் மறுத்துள்ளனர். விசாரணையை தவறாக வழிநடத்தும் குழுவினரின் சூழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல்: குற்றச்சாட்டை மறுக்கிறது பொலிஸ்!

Previous
« Prev Post