Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 30 நவம்பர், 2019

இனி அமைதியாக இருக்க முடியாது’: நீண்ட மௌனத்தை கலைத்தார் சஜித்!

  admin       சனி, 30 நவம்பர், 2019


ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து சுமார் இரண்டு வாரங்களாக கடைப்பிடித்த கனத்த மௌனத்தை இன்று உடைத்துள்ளார் சஜித் பிரேமதாச. சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தப்பட்டது, மற்றும் பத்திரிகையாளர்களிற்கு வழங்கப்படும் தேவையற்ற அழுத்தம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“அரசாங்கத்தின் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தாத மக்களும் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்” என்று சஜித் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தேர்தலின் போது கோட்டாபய அளித்த உறுதிமொழிகளுக்கு முரணானது என்று சுட்டிக்காட்டிய அவர், பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நோக்கி அரசு எந்திரத்தை கையாள்வதில் இருந்து விலகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“சுவிஸ் தூதரக பணியாளரை கடத்தியது இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள்” என்று சஜித் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களை தேவையற்ற அழுத்தத்திற்கு உட்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானது என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே அதன் ஆணையை நிறைவேற்ற நேரம் தேவைப்படுவதால் அதை விமர்சிப்பது நியாயமற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். இருப்பினும், சில சம்பவங்கள் நடைபெறுவதால் எதிர்க்கட்சி இனி அமைதியாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

“சில சம்பவங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன” என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இனி அமைதியாக இருக்க முடியாது’: நீண்ட மௌனத்தை கலைத்தார் சஜித்!

Previous
« Prev Post