Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

நாமலின் தபால் முத்திரையுடன் சென்ற கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக முறைப்பாடு!

  admin       திங்கள், 4 நவம்பர், 2019


கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பமிடப்பட்ட அவரது தேர்தல் விஞ்ஞாபனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட அஞ்சல் முத்திரைகளை பயன்படுத்தி கடிதங்களை அனுப்பி வருவதாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதராச்சி.

நேற்று தங்காலை நகரில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். ராஜபக்ஷர்களின் கோட்டையாக அவர்கள் கூறும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தை நாங்கள் வென்று வருகிறோம்.

இவ்வளவு பெரிய தோல்வி வரப்போகிறது என்பதை அறிந்த நாமல் ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ முத்திரையை மோசடியாகப் பயன்படுத்தி, தனக்கு கொடுக்கப்பட்ட முத்திரைகளைப் பயன்படுத்தி கோட்டாபயவுக்கு வாக்களிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். இதுபோன்ற பல கடிதங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.

இது ஒரு பெரிய சதி. இந்த கடிதம் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் உள்ள ஐ.தே.க உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான செயல்களால் தெற்கில் உள்ள மக்களை ஏமாற்ற முடியாது. ஹம்பாந்தோட்ட மக்கள் மீண்டும் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்” என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நாமலின் தபால் முத்திரையுடன் சென்ற கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக முறைப்பாடு!

Previous
« Prev Post