Breaking News

யாழில் குழந்தை பிரசவித்த இளம் பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!


பெண் குழந்தையை பிரசவித்த நான்கு நாளில் இளம் குடும்பப் பெண்ணொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழில் இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் குமுதினி (34) என்ற ஒரு பிள்ளையின் இளம் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஆறு நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டின் சமையலறையில் இருந்து குடும்பப் பெண் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

No comments

Note: Only a member of this blog may post a comment.