Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

கூட்டமைப்பு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நாமலுக்கு தமிழ் உறவுகள் முன்வைத்த கோரிக்கை!

  admin       திங்கள், 4 நவம்பர், 2019


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றம் சாட்டுவதை விடுத்து ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும், கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்துத்தருமாறு பொதுஐன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஐபக்சவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஐபக்சவின் வெற்றிக்காக தமிழ் மக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச இன்று திங்கட்கிழமை முற்பகல் யாழ் நகரில் மக்களை சந்தித்து தனது சிறிய தந்தையான கோட்டாபயவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஆகியோருடன் இணைந்து நாமல் யாழ் நகர மத்தியிலுள்ள யாழ் பிரதான பேருந்து தரிப்பிடத்திலும், வர்த்தக நிலையங்களிலும் துண்டுப்பரசுரங்களையும் விநியோகித்தும் தேர்தல பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த நாமல் ராஜபக்ச, தாங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாப அரசியலுக்காக தீர்வுகளை வழங்க விடாது தடைகளை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான தேவைகளை வழங்க முற்படும் போது அரசியல் தீர்வு குறித்து கதைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனையை திசைத் திருப்பிவிடுவதுடன், தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை என்றும் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தேசியக் கட்சிகள் இல்லாவிட்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்ற விதத்தில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

நாமல் ராஜபக்ச இவ்வாறு தொடர்ச்சியாக கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது குறுக்கிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கட்சிகளை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களான தமக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று வினையமாக கேட்டுக்கொண்டனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கூட்டமைப்பு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நாமலுக்கு தமிழ் உறவுகள் முன்வைத்த கோரிக்கை!

Previous
« Prev Post