Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 5 நவம்பர், 2019

வங்கக் கடலில் நாளை உருவாகும் ‘புல்புல்’ புயல்: இலங்கையை தாக்குமா?

  admin       செவ்வாய், 5 நவம்பர், 2019


வங்கக் கடலில் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறி வட மேற்கு திசையில் வடக்கு ஒடிஷாவை நோக்கி நகரும்.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை இது புயலாக வலுப்பெறும்.

இதற்கு புல் புல் என்று பெயரிடப்படும். இது ஒடிஷாவை நோக்கி நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரயில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதே சமயம், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று முதல் நவம்பர் 7ம் திகதி வரை மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மழை பெய்யுமென்றும், புயல் தாக்கம் இருக்காதென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வங்கக் கடலில் நாளை உருவாகும் ‘புல்புல்’ புயல்: இலங்கையை தாக்குமா?

Previous
« Prev Post