Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

பல்கலைகழக மாணவர்களின் இறுதி முயற்சியும் தோல்வி: 5 கட்சி கூட்டத்திற்கு உடனடியாக வாய்ப்பில்லை!

  admin       ஞாயிறு, 3 நவம்பர், 2019


ஐந்து தமிழ் கட்சிகளையும் மீளவும் சந்திக்க வைக்க யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. அடுத்த சில நாட்களிற்குள் ஐந்து கட்சிகள் கூட்டம் நடக்க வாய்ப்பில்லையென்பதை தமிழ்பக்கம் அறிந்தது. இதனால், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமை முயற்சி பெரும்பாலும் தோல்வியடைந்தது என்றுதான் தோன்றுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சிலவற்றிற்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் ஓரணியாக செயற்பட வைக்க யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

இதற்காக ஆறு கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன.

எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த முயற்சியிலிருந்து முதலில் வெளியேறியது. பின்னர், ஐந்து கட்சிகள் பொது ஆவணமொன்றில் கையெழுத்திட்டாலும், தனித்தவில் வாசித்த விக்னேஸ்வரன் முதலில் தனித்து தமது நிலைப்பாட்டை அறிவித்தார்.

பின்னர் தமிழ் அரசுக்கட்சியும் தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

இந்த நிலையில், ஐந்து கட்சிகள் ஆவணம் நகர முடியாமலிருந்ததுடன், ஐந்து கட்சி இணக்கப்பாட்டிற்கு எந்த அரசியல் பெறுமதியுமில்லாமலிருந்தது. இதனால், மீளவும் ஐந்து கட்சிகளையும் இணைத்து பொது நிலைப்பாட்டிற்கு வர பல்கலைகழக மாணவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இறுதிக்கட்ட முயற்சியாக, இன்று மாலை அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட வைக்க பல்கலைகழக மாணவர்கள் முயற்சித்தனர்.

எனினும், அது வெற்றியளிக்கவில்லை. தமது முடிவை அறிவித்துவிட்ட நிலையில், இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ள தமிழ் அரசுக்கட்சி தயக்கம் காட்டியது. அத்துடன், ரெலோ கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐந்து கட்சி இணக்கப்பாட்டிற்கு வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக தமது நிலைப்பாட்டை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் நாம் இப்போது கலந்து கொண்டு எந்த பலனுமில்லை. எமது நிலைப்பாட்டை 6ம் திகதி அறிவித்துவிட்டு, அதன்பின்னர் கலந்து கொள்கிறோம் என, செயலாளர் என்.சிறிகாந்தா கறாராக தெரிவித்துள்ளார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நாளை மறுநாள் (6) இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் உடனடியாக ஐந்து கட்சி கூட்டம் நடக்க வாய்ப்பில்லை. இதனால், பொது நிலைப்பாடு எடுக்கும் முயற்சி அனேகமாக சறுக்கியதாகவே தெரிகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பல்கலைகழக மாணவர்களின் இறுதி முயற்சியும் தோல்வி: 5 கட்சி கூட்டத்திற்கு உடனடியாக வாய்ப்பில்லை!

Previous
« Prev Post