Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

பிரித்தானியாவில் கொள்கலனில் 39 உடலங்கள்! இரண்டாவது சூத்திரதாரியும் கைது!!

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


பிரித்தானியாவின் எஸெக்ஸ் பகுதியில் குளிருட்டபட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து கடந்த 23 ஆந் திகதி 8 பெண்கள் உட்பட 39 உடலங்கள் (வியட்னாமியர்கள் மற்றும் சீனர்கள்) மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இந்த ஆட்கடத்தல் மரணங்களுக்கு காரணமான சூத்ரதாரிகளை கைது செய்வதற்கு ஐரோப்பியரீதியில் பிடியாணைகள் பிறப்பிக்கபட்டுள்ளன.

அவ்வாறாக ஐரோப்பிய பிடியாணை ஊடாக கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபர் இன்று டப்ளின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.  23 வயதான எமொன் ஹரிசன் மீது 39 கொலைக்குற்றசாட்டுகள் உட்பட்ட 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்தான் 39 உடலங்கள் இருந்த குறித்த கொள்கலனை பெல்ஜியத்தின் வோர்ன் நகரில் இருந்து ஷிபிறகே துறைமுகத்துக்கு செலுத்திய சாரதியாக அடையாளம் காணப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதே கொள்கலனை பிரித்தானிய துறைமுகத்தில் இருந்து எடுத்துச்சென்ற வண்டியின் சாரதியாக இருந்த மொறிஸ் றொபின்சன் ஏற்கனவே எஸெக்ஸ் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதும் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த ஆட்கடத்தலின் முக்கிய சூத்ரதாரிகளான கருதப்படும் வட அயர்லாந்தை சேர்ந்த இரண்டு சகோதர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். அதேபோல வியட்னாமிலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிரித்தானியாவில் கொள்கலனில் 39 உடலங்கள்! இரண்டாவது சூத்திரதாரியும் கைது!!

Previous
« Prev Post