Breaking News


2005ம் ஆண்டு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலை குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குருவிட்ட சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்தவர், இன்று மாலை அங்கிருந்து வெளியேறியதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2005 ஜூலை 1ம் திகதி இவோன் ஜோன்ஸ்டன் என்ற 19 வயது யுவதியை 33வது மாடியிலிருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்திருந்தார். தனது காதலியின் சகோதரியையே இவர் கொலை செய்தார். களியாட்ட விடுதிக்கு கொல்லப்பட்ட யுவதி, ஜெயமஹாவின் காதலியான தனது சகோதரி, ஜெயமஹா ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு காதலியின் சகோதரிக்கும்,  ஜெயமஹாவிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

பின்னர் காதலியை தனது காரில் அழைத்து வந்து 33வது மாடியிலுள்ள வீட்டில் விட்டார். அதன்பின்னர் 33வது மாடியிலேயே நின்று, சற்று தாமதமாக தனியாக வந்த காதலியின் சகோதரியை கீழே தள்ளிவிழுத்தி கொன்றிருந்தார்.

குற்றவாளி ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு மேல் நீதிமன்றம் 12 வருட கால சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குற்றவாளி மேன்முறையீடு செய்திருந்தார்.
மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதன்பின் குற்றவாளி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

அதன்போது வழக்குதாரரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையில் அந்த கொலை இடம்பெற்றதாக அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

எனினும், 19 வயதில் அந்த கொலையை அவர் புரிந்ததாக அண்மையில் மைத்திரி விருந்து நிகழ்வொன்றில் குறிப்பிட்டதுடன், அவருக்கு பொதுமன்னிப்பளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அந்த கொலையில் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறி சுவீடனில் வாழும், கொல்லப்பட்டவரின் சகோதரியான, கொலையாளியின் முன்னாள் காதலி- பொதுமன்னிப்பை எதிர்த்து வீடியோ பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.