Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 8 அக்டோபர், 2019

UPDATE: ஆசிரியையின் மரணத்தில் சந்தேகம்; இன்று பிரேத பரிசோதனை!

  admin       செவ்வாய், 8 அக்டோபர், 2019


விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட கம்பளை ஆசிரியையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசன்சலா ரத்நாயக்க (27) என்ற இளம் ஆசிரியையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1ம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பும் போது காணாமல் போயிருந்தார். மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராவில் வீடு திரும்பும் காட்சி பதிவாகியிருந்தது. குடை பிடித்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

எனினும், சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீட்டை அவர் அடைந்திருக்கவில்லை.

இது தொடர்பாக, ஆசிரியையின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். காணாமல் போன ஆசிரியை, கம்பளை பொலிஸ் நிலைய பதில் அதிகாரியொருவருடன் நிச்சயதார்த்தமும் ஆகியிருந்தார்.

மகாவலி ஆற்றில் இளம் பெண்ணொருவரின் உடல் நான்கு நாட்களாக மிதப்பதாக வத்தேகம பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுகஸ்தோட்ட, வத்தேகம, குண்டசால மற்றும் தெல்தெனியா காவல் நிலையங்களுக்கு கம்பளை பொலிசார் தகவல் அளித்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை விக்டோரியா நீர்த்தேக்கம், மகாவலி ஆறு கலக்குமிடத்தில் பெண்ணின் சடலம் அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், தமது மகள் எந்த மனக்கவலையுமின்றி இருந்தார் என்றும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆசிரியையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கம்பளை மாவட்ட நீதிபதி ஸ்ரீனித் விஜேசேகர சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு கண்டி பொது வைத்தியசாலையில் இன்று நடைபெறும்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! UPDATE: ஆசிரியையின் மரணத்தில் சந்தேகம்; இன்று பிரேத பரிசோதனை!

Previous
« Prev Post