Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 1 அக்டோபர், 2019

யாழ் ஓ.எம்.பி அலுவலகம் மீது மாட்டு சாணம் வீசி போராட்டம்!

  admin       செவ்வாய், 1 அக்டோபர், 2019


யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் வரணடைந்த போராளிகளுடன் சென்ற பிள்ளைகள் எங்கே?, யுத்தகாலத்தில் இராணுவத்தால் காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறிலங்கா அரசே பதில் கூறு என வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (1) முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் யாழ் மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்கள் தினமான இன்று யாழ். கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஓ.எம்.பி அலுவலகத்தின் மீது மாட்டு சாணம் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

யாழில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமற் போனவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் ஓ.எம்.பி அலுவலகம் மீது மாட்டு சாணம் வீசி போராட்டம்!

Previous
« Prev Post