Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 31 அக்டோபர், 2019

முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி!

  admin       வியாழன், 31 அக்டோபர், 2019


விடுதலைப்புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணியை துப்பரவு செய்த போதே குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில் த.வி.பு 055 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இது போன்ற நீர் எதிர்ப்பு மகெலன் கருவிகள் கடல் வழி பயணங்களின் போது பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் தரை மற்றும் கடல்வழி பயணத்தின் போது மற்றும் ஈரூடாக தாக்குதல் இலக்குகளின் கணிப்பீட்டை பெறுவதற்கும் குறித்த கருவிகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பகருவி ஒன்றே இன்று மீட்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி!

Previous
« Prev Post