Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 12 அக்டோபர், 2019

அவுஸ்திரேலியாவில் ‘சீரோ சான்ஸ்’… இலங்கை அகதிகள் குறிவைத்துள்ள புதிய நாடு: கும்பலாக படகு பயணம் ஆரம்பம்!

  admin       சனி, 12 அக்டோபர், 2019


கடல் மார்க்கமாக வரும் அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டையெடுத்துவருவதையடுத்து, இலங்கைஉள்ளிட்ட தென்னாசிய புகலிட கோரிக்கையாளர்களின் கவனம் புதிய நாட்டை நோக்கி திரும்பியுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNHCR) விடுத்துள்ள புதிய அறிக்கையில் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமூத்திரத்தில் மடகஸ்காருக்கும் மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான லா ரியூனியன் (La Réunion) மற்றும் மயோட்டே (Mayotte) ஆகிய தீவுகளிற்கு கடல்மார்க்கமாக வந்து அடைக்கலம் கோருவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட தென்னாசிய நாடுகளின் அகதிகளே இந்த இரண்டு சிறிய தீவுகளிற்கும் புகலிடம் கோரி வருகிறார்கள்.

2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 291 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்த தீவுகளிற்கு சென்றிருப்பதாக ஐ.நா அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸிற்கு சொந்தமாக இந்த தீவுகளில் புகலிடம் கோருவதன் மூலம், பின்னர் பிரான்சிற்குள் நுழையலாமென்பதே அகதிகளின் திட்டமாகும்.

ஆனால், அடைக்கலம் கோரும் இந்த அகதிகளின் விண்ணப்பங்கள் பிரான்சால் கடுமையான முறையில் கையாளப்பட்டு நிராகரிக்கப்பட்டு பெரும்பாலனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு வந்திறங்கியவர்களின் அகதிக்கோரிக்கை தொடர்பில் மாத்திரம் பிரான்ஸ் ஓரளவுக்கு நெகிழ்ச்சித்தன்மையை காண்பித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற இலங்கையை சேர்ந்த சுமார் 120 அகதிகளில் 34 பேர் தஞ்சக்கோரிக்கையை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். 60 பேர் உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மூன்று குழந்தைகள் உட்பட மிகுதிப்பேர் இன்னமும் அங்குள்ளார்கள்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் ரியூனியன் தீவில் போயிறங்கிய இலங்கையை சேர்ந்த எழுபது பேரில் ஆறு பேர் மாத்திரமே தஞ்சக்கோரிக்கையை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பிரான்ஸ் குடிவரவுக் கொள்கையின்படி, தஞ்சக் கோரிக்கையை விண்ணப்பிக்க முன்னரே அதனை தடுத்து, அந்த நபரை நாடு கடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சுமார் நாலாயிரம் கிலோமீற்றர் தூரம் படகுகள் மூலம் அகதிகளாக போகின்றவர்களின் இந்த புதிய கடற்பயணம் குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலையும் கரிசனையும் வெளியிட்டுள்ளது.

ரியூனியன் தீவுகளில் தமிழர்கள் வாழ்வதும் குறிப்பித்தக்கது.

அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் படகு அகதிகளின் புகலிட கோரிக்கைக்கு சீரோ (0) சான்ஸ் என்ற பிரச்சாரத்தை இலங்கை உள்ளிட்ட அகதிகள் புறப்படும் நாடுகளில் அவுஸ்திரேலியா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அவுஸ்திரேலியாவில் ‘சீரோ சான்ஸ்’… இலங்கை அகதிகள் குறிவைத்துள்ள புதிய நாடு: கும்பலாக படகு பயணம் ஆரம்பம்!

Previous
« Prev Post