Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 3 அக்டோபர், 2019

மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் தொடர்பு அதிகாரி பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டில்!

  admin       வியாழன், 3 அக்டோபர், 2019


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்கள அதிகாரி பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளில் வெளிப்படையாக இறங்கியுள்ளார். மாவட்ட தகவல் திணைக்களம் பெரமுனவின் தேர்தல் பிரசார பிரிவாக செயற்பட போகிறதா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

மாவட்ட செயலக தகவல் திணைக்கள அதிகாரி ஜீவானந்தம் என்பவர், நேற்று மட்டக்களப்பில் நடந்த பொதுஜன பெரமுனவின்  அங்கத்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கூட்டத்திற்கு வந்த பெரமுன பிரமுகர்களுக்கு வரவேற்பும் அளித்தார்.

அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்ற விதிமுறைகள் இருக்கும்போது, மாவட்ட செயலகத தகவல் திணைக்கள அதிகாரியின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாவின் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் தொடர்பு அதிகாரி பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டில்!

Previous
« Prev Post