Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 12 அக்டோபர், 2019

ஆட்சிப் பீடம் ஏறினால் இராணுவத்தினர் விடுதலை-கோட்டா! ஞானசாரர் விடுத்துள்ள கருத்து!

  admin       சனி, 12 அக்டோபர், 2019


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றமிழைக்காமல் சிறைக்குச் சென்ற இராணுவத்தினரை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

உண்மையில், எம் அனைவருக்கும் இராணுவம் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது. இராணுவத்தினர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாமும் இருக்கிறோம்.

இதனை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்றில்லை. இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கூட இதனை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக மக்கள் சிந்தித்தே செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரை, இந்த நாட்டுக்கு எவரால் குறைவான அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை சிந்தித்தே செயற்படவேண்டும்.

தற்போது கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தான் ஜனாதிபதியானால், இராணுவத்தினரை விடுவிப்பதாக அவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிறகே நாம் இறுதி முடிவை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஆட்சிப் பீடம் ஏறினால் இராணுவத்தினர் விடுதலை-கோட்டா! ஞானசாரர் விடுத்துள்ள கருத்து!

Previous
« Prev Post