Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2019

ராஜபக்ஷக்களின் சூழ்ச்சி: சந்திரிக்கா தயாசிறிக்கு கடிதம்

  admin       வியாழன், 10 அக்டோபர், 2019


ராஜபக்ஷக்களின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து சுதந்திரக் கட்சியை சிதைவடையச் செய்ய வேண்டாம் என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் கோதாபயவுக்கு ஆதரவு வழங்குவது ஏற்புடையதல்ல. இந்த செயற்பாடு சுதந்திர கட்சியை முழுமையாக காட்டி கொடுப்பதாகும்.

குறித்த கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தால், நாம் தலைமைத்துவத்தை ஏற்று கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்பி இருப்போம்.

எனவே சுதந்திர கட்சியை அதிகமாக நேசிப்பவர், மற்றும் அறிந்தவர் என்ற ரீதியில் கட்சி அழிந்துபோகும் நிலைமைக்கு இனியும் இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ராஜபக்ஷக்களின் சூழ்ச்சி: சந்திரிக்கா தயாசிறிக்கு கடிதம்

Previous
« Prev Post