Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 7 அக்டோபர், 2019

சிவாஜியுடன் எந்த தொடர்பையும் வைக்கக்கூடாது’: ரெலோ உறுப்பினர்களிற்கு தலைமை அதிரடி உத்தரவு!

  admin       திங்கள், 7 அக்டோபர், 2019


கட்சி கட்டுப்பாடுகளையும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகளையும் மீறி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என ரெலோவின் உறுப்பினர்களிற்கு கட்சி தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று மாலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு நேரில் சென்று, கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் செல்வம் அடைக்கலநாதன்.

சிவாஜிலிங்கத்துடன் தொடர்போ, ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஒத்துழைப்போ வழங்கக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வினவுவதற்கு கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதனை பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவர் பதிலளிப்பதை தவிர்த்து விட்டார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சிவாஜியுடன் எந்த தொடர்பையும் வைக்கக்கூடாது’: ரெலோ உறுப்பினர்களிற்கு தலைமை அதிரடி உத்தரவு!

Previous
« Prev Post