Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

அரசியல் நேர்மையற்ற அனந்தி, சிவாஜிக்கு ஆதரவில்லை: யாழ் சிவில் சமூகம் அதிரடி முடிவு!

  admin       ஞாயிறு, 6 அக்டோபர், 2019


வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதில்லையென, பொது வேட்பாளரை களமிறக்க முயற்சி மேற்கொள்ளும் யாழ் சிவில் சமூகம் முடிவு செய்துள்ளது.

அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரமுகர் ஒருவர் சற்று முன்னர் தமிழ்பக்கத்திடம் இதனை தெரிவித்தார்.

மேற்படி இருவரது நடவடிக்கையும் நேர்மையற்றதென சாடிய அவர், அரசியல் நேர்மையற்ற அவர்களுடன் இனிமேல் இந்த விடயத்தில் பேச்சுவார்த்தையெதுவும் நடத்தப் போவதில்லையென்றும் தெரிவித்தார்.

தனது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பாத அவர் இது தொடர்பில் குறிப்பிடும்போது- பொது வேட்பாளரை களமிறக்க நாம் சில நாட்களாக முயற்சித்தோம். இதில் அனந்தி சசிதரனையும் ஒரு தரப்பாக கருதி பேசினோம். எமது அழைப்பை ஏற்று எல்லா பிரமுகர்களும், சின்மயா மிஷனிற்கே வந்து பேசினார்கள். முக்கிய கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் வந்தார்கள். அனந்திக்கும் அழைப்பு விடுத்தோம். அவசரமாக கொழும்பு செல்ல வேண்டுமென கூறி, அவரது வீட்டுக்கு வரும்படி கேட்டார். அவரது வீட்டுக்கு சென்றோம். பொது வேட்பாளர் குறித்து நேற்று முன்தினம் பேசியபோதும், எதற்காக கொழும்பு அவசரமாக புறப்படுகிறேன் என அவர் கூறவில்லை. பொது வேட்பாளர் குறித்து அவருடன் பேசியபோதும், அவர் எமக்கும் சாதகமாக பேசினார்.

சிவாஜிலிங்கத்திடமும் எம்மில் சிலர் பேசினார்கள். அவரும் தனது முடிவை எம்மிடம் பேசவில்லை.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தின்போது, கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனே அவரிடம் நேரில் கேட்டிருக்கிறார். கடந்தமுறைகளை போல தேர்தலில் போட்டியிடும் திட்டமுள்ளதா என செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருக்கிறார். நேற்று அதை சிவாஜிலிங்கம் மறுத்துள்ளார்.

ஆனால் இருவரும் இன்று இரகசியமாக கொழும்பு சென்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். நாம் மேற்கொள்ளும் முயற்சியை அவர்களுடன் பேசியபோதும், தமது திட்டத்தை எம்மிடம் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பேசியிருந்தால், அவர்களை கூட பொது வேட்பாளராக களமிறக்குவது பற்றி யோசித்திருக்கலாம். ஆனால், அவர்களிடம் அந்த அரசியல் நேர்மை இருக்கவில்லை. அரசியல் நேர்மையற்ற அந்த இருவரையும் நாம் ஆதரிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை“ என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரசியல் நேர்மையற்ற அனந்தி, சிவாஜிக்கு ஆதரவில்லை: யாழ் சிவில் சமூகம் அதிரடி முடிவு!

Previous
« Prev Post