Breaking News



ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்குமென்பது பெரிய சிதம்பர இரகசியமல்ல என்ற போதும், அது குறித்து ஓரளவு எதிர்பார்ப்பு இல்லாமலில்லை.

கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைப்பாடு எடுத்தது என்பது சரியாகாது. மக்களின் முடிவின் பின்னால் சென்றது என்பதே சரி. ஒரு வேளை, நல்லாட்சி வேட்பாளர்களை ஆதரிக்காமல் விட்டிருந்தாலும், மக்கள் அந்த வேட்பாளர்களையே ஆதரித்திருந்திருப்பார்கள்.

இம்முறை, கடந்த தேர்தல் அளவிற்கு ராஜபக்ச தரப்பில் அதிருப்தியும், கோபமும் இல்லையாயினும், அந்த தரப்புடன் எந்த சமரசமும் ஏற்படவில்லையென்பதே உண்மை. அதனால் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின் முடிவு என்னவாக இருக்குமென்பது ஊகிக்கக் கூடியதுதான்.

இதனால்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பு போவதற்கு வேறு இடமில்லையென்ற தெனாவெட்டில், ஐ.தே.க தரப்பு இருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை மதில் மேல் பூனையாக இருப்பதாலோ என்னவோ, சஜித் பிரேமதாச ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு எம்.பிக்களிற்கும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து உரையாடி வருகிறார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

அனேகமாக எம்.பிக்கள் சொல்லி வைத்ததைபோல, “கட்சி எடுக்கும் முடிவுதானே நமது முடிவு“ என தெரிவித்தாலும், “கட்சி என்ன முடிவெடுத்தாலும், உங்களின் நிலைப்பாடு என்ன?.. நீங்கள் என்னுடன்தானே நிற்கிறீர்கள்?“ என அவர்களின் ஆதரவை தனித்தனியே உறுதி செய்கிறார்.

இது தவிர, ஊடக முதலாளியான எம்.பியொருவருடன் விசேட டீல் ஒன்றும் நடந்துள்ளது. அதற்காக சிலபல பரிமாற்றங்களும் நடந்ததாக அரசியலரங்கில் செய்தியுண்டு.

No comments

Note: Only a member of this blog may post a comment.