Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 31 அக்டோபர், 2019

இன்று சந்திரிகா- ஜ.தே.மு புரிந்துணர்வு உடன்படிக்கை!

  admin       வியாழன், 31 அக்டோபர், 2019


ஐனநாயக தேசிய முன்னணியும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தரப்பும் இன்று (1) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.

சுதந்திரக்கட்சியும் பெரமுனவும் கூட்டணி வைத்துக் கொண்டதில், சு.கவின் இரண்டாம் மட்ட தலைவர்கள் கணிசமானவர்கள் அதிருப்தியடைந்து சந்திரிகா, குமார வெல்கம கூட்டணியின் கீழ் செயற்பட்டு வருகிறார்கள். இவர்கள் சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பென்ற பெயரில் செயற்பட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் ஒ்ப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க கையெழுத்திடுவார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

சு.க தரப்பினர் நீல உடை அணிந்து வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இன்று சந்திரிகா- ஜ.தே.மு புரிந்துணர்வு உடன்படிக்கை!

Previous
« Prev Post