Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இரண்டாக பிளவடைந்தனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்: லண்டன் நிதியில் இயங்குவதாக குற்றச்சாட்டு!

  admin       ஞாயிறு, 20 அக்டோபர், 2019


காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான போராட்டத்தை ஒட்டுக்குழுவொன்றின் பின்புலத்தில் சிலர் நீர்த்துப் போக செய்வதாக பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர் காணாமல் போனவர்களிற்கான யாழ் மாவட்ட குழுவின் தலைவி சுகந்தி.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

காணாமல் போனவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள். கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் கரடிப்போக்கிற்கு வந்து, இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்துகிறோம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பின் மாவட்ட தலைவிகளை திசைதிருப்பி, எமது போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய முயற்சி நடந்து வருகிறது.

இலண்டனிலுள்ள தமிழ் ஒட்டுக்குழுவொன்று அரசாங்கத்தின் பணத்தை பெற்று, எமது போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினரை இயக்குகிறது. போராட்டத்தில் விரக்தியடைந்து, நாமே போராட்டத்தை கைவிட வைக்கும் முயற்சியையே அவர்கள் மேற்கொள்கிறார்கள். இந்த காலத்தில் காணாமல் போனவர்களை தேடிய 53 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படியான விரக்தியை ஏற்படுத்தவே அந்த குழு திட்டமிட்டு செயற்படுகிறது என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இரண்டாக பிளவடைந்தனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்: லண்டன் நிதியில் இயங்குவதாக குற்றச்சாட்டு!

Previous
« Prev Post