மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட சத்திரசிகிச்சையில் சிசு மரணமடைந்ததை அடுத்து பெற்றோர், மருத்துவர்கள் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவிப்பதற்காக கர்ப்பிணித்தாயொருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதன்போது தாய்க்கு சுகப்பிரசவம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று திடீரென சத்திரசிகிச்சை செய்துள்ளனர்.இதன்போது குழந்தை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் குழந்தையின் தலையில் மூன்று காயங்களும் உள்ளன.
இதனால் குழந்தையின் பெற்றோர் தாளாத சோகத்துடன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையின் சடலத்துடன் வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.