Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2019

காலி முகத்திடல் கூட்டத்தை குழப்ப மறைந்திருந்த மஹிந்த குரூப்: கடைசி நேரத்தில் பேசாமலிருந்த சிறுபான்மையின தலைவர்கள்!

  admin       வியாழன், 10 அக்டோபர், 2019


இனங்களிற்கிடையில் மோதலை ஏற்படுத்தி, மோசமான அரசியல் செய்கிறார்கள் என்ற விமர்சனம் பொதுஜன பெரமுனவின் மீது கடுமையாக வைக்கப்பட்டு வருகிறது. நேற்று, பெரமுன தரப்பினர் செய்ய முற்பட்ட மோசமான காரியம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காலி முகத்திடலில் புதிய ஜனநாயக கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்போது, ரிசாட் பதியுதீன் உரையாற்றும்போது, திடீரென கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவரை பயங்கரவாதியாக சித்தரித்து கூச்சலிட ஒரு குழு களமிறக்கப்பட்டுள்ளது, அதை தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்ப சிறு குழு தயார் நிலையில் நிற்கிறது என்ற புலனாய்வு தகவல், கட்சி தலைமைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சிறுபான்மைக்கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றுவது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் விடயத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றியதாக மேடைகளில் பெரமுனவினர் குறிப்பிட்டு வந்தாலும், வெளிவரும் உள்ளக தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! காலி முகத்திடல் கூட்டத்தை குழப்ப மறைந்திருந்த மஹிந்த குரூப்: கடைசி நேரத்தில் பேசாமலிருந்த சிறுபான்மையின தலைவர்கள்!

Previous
« Prev Post