Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 11 அக்டோபர், 2019

கோட்டா கதவை திறந்ததும் சிறையிலிருந்து வெளியில் வரப்போவது யார்? எத்தனை பேர்?

  admin       வெள்ளி, 11 அக்டோபர், 2019


“நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 17ம் திகதி காலையில் சிறையிலுள்ள பாதுகாப்பு படை வீரர்களை சிறையிலிருந்து விடுவிப்பேன்“

இவ்வாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். அநுராதபுரத்தில் நடந்த பெரமுனவின் முதலாவது பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது, கோட்டாபய இதனை தெரிவித்திருந்தார்.

தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு என்ற இரண்டு விவகாரங்களை முன்வைத்து பெரமுன சிங்கள அடித்தட்டு மக்களை குறிவைத்து களமிறங்கியுள்ளது. பெரமுனவின் பிரச்சாரங்களை மட்டுமே நம்பும் சாதாரண மக்கள், இராணுவத்தினரை கண்டபடி பிடித்து இந்த அரசு சிறையில் அடைத்துள்ளது, ஏராளமாக இராணுவத்தினர் சிறைச்சாலையில் இருப்பார்கள் என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல.

குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தில் கைதாகியுள்ள பாதுகாப்பு தரப்பினரும், அவர்கள் ஏன் கைதானார்கள், பிணையில் வெளியில் உள்ளவர்கள், விளக்கமறியலில் உள்ளவர்கள் பட்டியல் இதுஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, தேசிய பாதுகாப்பு என்பது நிலத்தில் விழுந்து வணங்குவதல்ல, அப்படியெனில் தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நிலத்தில் விழுந்து வணக்கினால் தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு விடுமே என கிண்டலடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




காலி முகத்திடலில் நடந்த ஐதேகவின் முதலாவது பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய தொழிற்சங்க பிரதிநிதியொருவர், “வரவிருப்பது பிரதம நீதியரசருக்கான தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தல். தேர்தலில் வென்ற மறுநாளே கோட்டாபயவினால் சட்டத்தை வளைத்து, நியாயத்திற்கு முரணாக யாரையும் விடுவிக்க முடியாது“ என குறிப்பிட்டிருந்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோட்டா கதவை திறந்ததும் சிறையிலிருந்து வெளியில் வரப்போவது யார்? எத்தனை பேர்?

Previous
« Prev Post