Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

வவுனியாவில் தேர்தல் பிரசார பணியில் அரச உத்தியோகத்தர்கள்

  admin       ஞாயிறு, 20 அக்டோபர், 2019


வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் மற்றும் நகர்ப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார பணிகளிலேயே அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்றுள்ளதாகவும் அவர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனவும் ஆதாரத்துடன் முறையிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் மக்களை சமுர்த்தி கூட்டம் என நெரிவித்தே மக்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீனின் செயலாளர்கள் மற்றும் இணைப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தேர்தல் பிரசாரத்திலோ சமூக வலைத்தளமூடான பிரசாரத்திலோ அரச ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வவுனியா மாவட்ட சமுர்ரத்தி உத்தியோகத்தர்கள் பலர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வவுனியாவில் தேர்தல் பிரசார பணியில் அரச உத்தியோகத்தர்கள்

Previous
« Prev Post