Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 3 அக்டோபர், 2019

தமிழ் பொது வேட்பாளர் தயார்: கிழக்கை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரச நிர்வாகி?

  admin       வியாழன், 3 அக்டோபர், 2019


தமிழ் அரசியல் கட்சிகளை ஒரு முகாமிற்கு கொண்டு வந்து, தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் மந்திராலோசனைகள் இன்று பின்னிரவு கடந்தும் யாழில் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

தமிழ் பொது வேட்பாளராக கிழக்கை சேர்ந்த ஒருவர் களமிறக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ் வேட்பாளரை களமிறக்கும் நகர்வுகளை மேற்கொண்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, இதற்காக சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்றை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன்இந்த குழு பேச்சு நடத்தியது. ஆனால் ஏனைய கட்சிகளுடன் இதுவரை பேச்சு நடத்தவில்லை. இந்த நிலையில், பொது வேட்பாளரிற்கு கொள்கையளவில் இணைக்கம் தெரிவித்திருந்தன இந்த கட்சிகள்.

இதையடுத்து பொது வேட்பாளர் ஒருவரை அறிவிக்கும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் பேரவை இன்று இரவு நீண்டநேரமாக கலந்துரையாடலில் ஈடுபட்டது. இதில் கிழக்கை சேர்ந்த ஒருவரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருந்தது.

அரச நிர்வாகத்துறையில் உயர் பதவி வகித்த அவரை வேட்பாளராக களமிறக்கலாமென்ற ஆலோசனைகள் நடந்து வருகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழ் பொது வேட்பாளர் தயார்: கிழக்கை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரச நிர்வாகி?

Previous
« Prev Post