Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 9 அக்டோபர், 2019

கோட்டாபயவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கான தலைமையை அலி சப்ரி ஏற்க வேண்டும்- முஸம்மில்!

  admin       புதன், 9 அக்டோபர், 2019


கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெறுவது அல்லாஹ்வின் உதவியினால் உறுதியானது எனவும், அந்த வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக மாற வேண்டும் எனவும் மேல் மாகாண ஆளுநர் எம்.முஸம்மில் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் வியாபாரம் செய்பவர்கள். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்து மூன்று மாதங்கள் செல்ல முன்னர் மத்திய வங்கியில் திருடினார்கள். திருடர்களைப் பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் இவ்வாறுதான் இருந்தது. இதனாலேயே நாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினோம்.

அடுத்து அமையவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையிலான அரசாங்கத்தில், முஸ்லிம் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பை அலி சப்ரில் ஏற்க வேண்டும் எனவும் அவர் தனது உரையின் போது கேட்டுக் கொண்டார்.  

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோட்டாபயவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கான தலைமையை அலி சப்ரி ஏற்க வேண்டும்- முஸம்மில்!

Previous
« Prev Post