Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 5 அக்டோபர், 2019

மனோவுடன் மல்லுக்கட்டிய மஹிந்த ஆதரவு பெண் உறுப்பினர்!

  admin       சனி, 5 அக்டோபர், 2019


தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வள பகிர்வாளர்களாக மொழி பயற்றுவிப்பாளர்களை நியமிக்கும் நிகழ்ச்சி திட்டம் நேற்று (05) நடைபெற்றபோது, மஹரகம நகரசபை உறுப்பினர் ஒருவர் அமைச்சர் மனோ கணேசனுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செயன்முறை தேர்தல் சட்டங்களுக்கு எதிரானது என தெரிவித்தே அவர் தனது எதிர்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வள பகிர்வாளர்களாக 1200 மொழி பயிற்சியாளர்களை நியமிக்கும் நிகழ்வு நேற்று கோட்டாவையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

அந்த இடத்திற்கு வந்த மஹரகம நகரசபையின் மஹிந்த ஆதரவு உறுப்பினர் ஒருவர் இந்த இந்த செயன்முறை தேர்தல் சட்டங்களுக்கு எதிரானது என தெரிவித்து எதிர்ப்பை வெளியிட்டார்.

அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் அங்கு வருகைதந்து தேர்தல் முடிவடையும் வரை இந்த நிகழ்வை பிற்போடுமாறு அமைச்சர் மனோ கணேசனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மனோவுடன் மல்லுக்கட்டிய மஹிந்த ஆதரவு பெண் உறுப்பினர்!

Previous
« Prev Post