Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 30 அக்டோபர், 2019

வீதியால் சென்ற பாடசாலை மாணவியை அழைத்து சீரழித்தவரின் விளக்கமறியல் நீடிப்பு!

  admin       புதன், 30 அக்டோபர், 2019


வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(30) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது

கடந்த ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி கைதானார்.குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சிறுமி குறித்த மேற்பார்வை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இம்முறை சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அவரின் வயதினை சுட்டிக்காட்டி பிணைவிண்ணப்பம் தொடுத்த போதிலும் நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்து வருவதுடன் எதிர்வரும் தவணையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
 
சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவி வீடு திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) என்பவர் அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன் இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.இந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். பின்னர் இரண்டு நாட்களின் கடந்த நிலையில் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்திருந்தனர்.இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு அமைப்போ பெண்களுக்கான உரிமை காப்பகமோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வீதியால் சென்ற பாடசாலை மாணவியை அழைத்து சீரழித்தவரின் விளக்கமறியல் நீடிப்பு!

Previous
« Prev Post